குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்பட வேண்டும்

குமாரபாளையம் அருகே, கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சி, ஓலைப்பாளையம் அருகே, பெரியார் நகரில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த இடத்தில், சாலையோரமாக அதிகளவில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு, பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் செல்வோர் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...