உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலகங்களில், குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் – 2005ன் கீழ், 12 ஆயிரம் ரூபாய் ஒப்பந்த அடிப்படையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது. பத்தாம் வகுப்பு, முதுநிலை தமிழ்-ஆங்கிலம் தட்டச்சு, கணினி பயிற்சி சி.ஓ.ஏ., ஆகியவை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். மேற்காணும் ஆவணங்களுடன், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண், 19, இரண்டாம் தளம், கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...