வடிகால் பாலம் கட்டுமான பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

குமாரபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில், வடிகால் பாலம் கட்டும் பணியை தீவிரப்படுத்த, கோரிக்கை எழுந்துள்ளது. குமாரபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் அருகே பழைய வடிகால் பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டுமானப்பணி துவங்கியுள்ளது. இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்தது. பல்வேறு போராட்டங்களை பல்வேறு அமைப்பினர் மேற்கொண்டதால் புதிய சாலை தற்போது அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின், பி.எஸ்.என்.எல்., சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. மின்வாரியம் சார்பில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு புதைவட மின்கம்பிகள் அமைக்கப்பட்டன. இப்போது, வடிகால் பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: சாலை குண்டும், குழியுமாக இருந்த போது, எந்த பணியும் நடைபெறவில்லை. புதிய சாலை அமைக்கப்பட்ட நிலையில் இப்போது ஒவ்வொரு பணியாக செய்து மீண்டும் குண்டும், குழியுமாக மாற்றி விட்டனர். இப்போது வடிகால் பாலம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இது போன்ற பணிகளை பள்ளி விடுமுறை காலங்களில் செய்யாமல் இப்போது செய்தால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு எப்படி செல்ல முடியும்? பாலம் கட்டும் பணியை, கூடுதல் ஆட்கள் வைத்து, விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...