சாலை பராமரிப்பு பணி

நண்பர்களுக்கு வணக்கம்: குமாரபாளையம் ஆனங்கூர் சாலை பராமரிப்பு பணி மேற்கொண்டு வருவதால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பெரும் சிரமப்பட்டு சாக்கடை பள்ளத்தில் இறங்கி கடந்து சென்று வந்ததை அறிந்து சிரமப்படும் மாணவர்களின் வசதிக்காக மாற்றுப்பாதை ஏற்படுத்த நமது #நம்ம_குமாரபாளையம் நண்பர்களால் திட்டமிடப்பட்டு இன்று காலை அரசு பள்ளி மாணவர்கள் ஆனங்கூர் சாலை செல்ல மாற்று பாதை நம்ம குமாரபாளையம் அமைப்பால் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வந்தது என்று மகிழ்சியுடன் தெறிவித்துக்கொள்கிறோம்.

இது போன்று சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்காக மாற்றுப்பாதை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு பராமரிப்பு பணிகளை துவங்குமாறு இதன் மூலம் அரசு அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு #நம்ம_குமாரபாளையம் அமைப்பு சார்பாக வேண்டுகோள் வைக்கப்படுகிறது..

 

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...