பள்ளி அருகே மின்மாற்றி

குமாரபாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே மின்மாற்றி உள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் சென்று வருகின்ற சாலை. அதிக தொழிற்கூடங்கள் உள்ள பகுதி என்பதால், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தும் அதிகம். இந்த வீதியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் மின்மாற்றி உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த மின்மாற்றியை சுற்றிலும் வேலி அமைக்க, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...