நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல்: தனியார் துறை நிறுவனங்களும், – அங்கு பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும், ‘தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்’ நாளை (மே, 31) காலை, 10:30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, சூப்பர்வைசர், கணினி இயக்குபவர், மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், கண்காணிப்பாளர், மேலாளர், கணக்காளர், காசாளர், மெக்கானிக், சேல்ஸ் அசோசியேட் போன்ற பணிகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளன. பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்பழகுனர் படிப்பு மற்றும் அனைத்து வித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என, நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், முகாமில் பங்கேற்கலாம். இவ்வாறு, கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

 

காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, காந்தி நகர் பகுதியில் சாலையோரம் அதிக குப்பை...

புதிய சாலையாக மாற்றணும்!

குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும்,...