”100 சதவீதம் ஓட்டுப்பதிவே, நமது நோக்கம்

நாமக்கல்: ”100 சதவீதம் ஓட்டுப்பதிவே, நமது நோக்கம். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து தன்னார்வு தொண்டு அமைப்புகள் முன் வர வேண்டும்,” என, சப் கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், ‘நேர்மையான ஓட்டு, எங்கள் இலக்கு’ என்ற முழக்கத்துடன், 100 சதவீதம் வாக்காளர்கள் நேர்மையாக ஓட்டுப்போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், நாமக்கல் உழவர்சந்தையில் நடந்தது. சப்-கலெக்டர் கிராந்திகுமார், பொதுமக்களுக்கு, துண்டு பிரசுரம் வினியோகம் செய்து, விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்து பேசியதாவது: 100 சதவீதம் ஓட்டு பதிவே, நமது நோக்கம். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து தன்னார்வு தொண்டு அமைப்புக்கள் முன் வர வேண்டும். குறிப்பாக, நகர்ப்புற மக்களிடையே, அதிகமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அவற்றை ஏற்படுத்தி, 100 சதவீதம் ஓட்டுப்பதிவை இலக்கை அடைவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ரங்கநாதன் தலைமை வகித்து பேசுகையில்,”நேர்மையான ஓட்டு, நமது இலக்கு, ஓட்டுக்கு பணம் பெறாமல், நேர்மையாக, 100 சதவீதம் ஓட்டுகளை அளிக்க வேண்டும். இதை வலியுறுத்தி, இந்திய மருத்துவ சங்கம், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்,” என்றார். தாசில்தார் சுப்ரமணியம், வாக்காளர் விழிப்புணர்வு முதன்மை அலுவலர் ராஜேஸ்கண்ணன், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Sharing

தண்ணீர் வீணாகாமல் தடுக்கும் விதமாக

இன்று காலை 7.00 மணியளவில் நம்ம குமாரபாளையம் அமைப்பு சார்பாக குமாரபாளையம் சின்னப்பனாயக்கன்பாளையம்...

Leave your comment