மாணவர்கள் திறன் ஊக்குவிப்பு திட்டம் :

,
நம்ம குமாரபாளையம் அமைப்பு சார்பாக இன்று காலை நகராட்சி துவக்கப்பள்ளி ,சுந்திரம் காலனி, குமாரபாளையம் . பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் பாட்டு,நடனம்,கேரம்,செஸ்,பேச்சு போன்ற போட்டிகளில் பங்குபெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த திட்டம்  மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவும் மேடை பயம் நீங்கவும் திறமைகளை ஊக்குவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்சியின் போது நம்ம குமாரபாளையம் அமைப்பின் முதன்மை தன்னார்வலர் திரு.செ.ஓம்சரவணாஅவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்கு சர்டுகளை பரிசாக வழங்கினார் முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. புஷ்பலதா அவர்கள் வரவேற்றார்கள்.இந்த நிகழ்ச்சியில் குமாரபாளையம் கதிர்ராஜ் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ஜெயராஜ் அவர்காள் சிறப்பு விருந்தினராக பங்குகொண்டு மாணவர்கள் தங்கள் வாழ்வில் தனித்திறமைகளோடு வளம்வர ஊக்கமளித்து பேசினார்கள். நிகழ்சியில் நம்ம குமாரபாளையம் அமைப்பின் தன்னார்வலர்கள்,அறிவொளி சரவணன்,ஸ்ரீகங்கா, பிரகாஷ் ,பாலாஜி ஸ்டார் மற்றும் சிலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நம்ம குமாரபாளையம் அமைப்பின் தண்ணார்வலர்கள் தனித்திறன் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஊக்குவிக்கும் விதமாக பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

மல்யுத்த வீரருக்கு நிதி உதவி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சார்ந்த மல்யுத்த வீரர் அபிஷேக்...

இலவச நீர் மோர்

நண்பர்களுக்கு வணக்கம் : கடந்த ஆண்டை போலவே இப்பவும் நம்ம குமாரபாளையம் அமைப்பு...

1 reply added

  1. oprolevorter December 7, 2019

    With havin so much content do you ever run into any problems of plagorism or copyright infringement? My blog has a lot of exclusive content I’ve either written myself or outsourced but it seems a lot of it is popping it up all over the web without my permission. Do you know any techniques to help stop content from being ripped off? I’d definitely appreciate it.

    http://www.oprolevorter.com/

Leave your comment